நோ டூ சீனா...யெஸ் டூ இந்தியா!! அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவதென்ன?!!

நோ டூ சீனா...யெஸ் டூ இந்தியா!! அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவதென்ன?!!

Published on

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கில் சீன வீரர்கள் இந்திய ராணுவ வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக செய்தி வெளியான போது அனைத்து கட்சிகளும் கண்டனங்களும் விமர்சங்களும் தெரிவித்திருந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் “நமது ராணுவ வீரர்கள் நாட்டின் பெருமை” என்று கூறியிருந்தார்.

சீன பொருட்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டுமென டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  “சீன தயாரிப்புகளை விட இந்திய பொருள்கள் இரண்டு மடங்கு விலை இருந்தாலும், சீன பொருட்களை வாங்க மாட்டோம்.  எவ்வளவு விலையானாலும் உள்நாட்டு பொருட்களையே வாங்குவோம்” என இந்திய மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் கெஜ்ரிவால்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com