”நீண்ட காலம் எதையும் மறைக்க முடியாது...” மௌனம் கலைத்த மத்திய அரசு...

”நீண்ட காலம் எதையும் மறைக்க முடியாது...” மௌனம் கலைத்த மத்திய அரசு...

2020 முதல், இந்திய சீனா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அதனால் இந்திய ராணுவமும் பெரிய அளவில் படைகளை குவித்துள்ளது.

எல்லை மோதல்:

அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்திய அரசியல் சூடுபிடித்துள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.  தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ராகுலின் குற்றச்சாட்டுளுக்கு எதிராக மௌனம் கலைத்துள்ளார். 

மௌனம் கலைத்த ஜெய்சங்கர்:

2020 முதல், இந்திய சீனா எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அதனால் இந்திய ராணுவமும் பெரிய அளவிலான ராணுவ படைகளை அங்கு குவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் சீனாவின் எந்தவொரு சுயநலமான முயற்சியையும் முறியடிக்க நமது ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது எனவும் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர் சீன விவகாரத்தில் இந்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், ராகுல் காந்தியின் கூற்று நம்பத்தகுந்ததாக இல்லை எனவும் பேசியுள்ளார் ஜெய் சங்கர்.

ராகுலின் குற்றச்சாட்டு என்ன?:

இதற்கு முன்னதாக இந்தியா-சீனா எல்லையில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என ராகுல் காந்தி கூறியிருந்தார். மேலும் “சமீபத்தில் நடந்தது வெறும் சண்டை அல்ல, சீனா முழு அளவிலான போருக்கு தயாராகி வருகிறது.  இந்த அச்சுறுத்தலை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது” என ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார்.  

தொடர்ந்து ராகுல் “எங்களிடம் இருந்து உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்காது” எனவும் எச்சரிக்கும் விதமாக கூறியிருந்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  வடகொரியாவின் உளவு ஏவுகணை...அச்சப்படும் வல்லரசு நாடுகள்...காரணம் என்ன?!!