
டேராடூனில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக திமுகவின் மூத்த வழக்கறிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் கலந்துகொண்டார்.
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் மூலமாக சாதிவாரிய கணக்கெடுப்பை யூனியன் பட்டியலிலிருந்து பொது பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும், மற்றும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC ) இட ஒதுக்கீட்டை மக்கள் தொகையின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகக் கூறினார்.
மேலும், இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வர போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், வீதியில் இறங்கிப் போராடவும் தயார் எனவும் குறிப்பிட்டார்.