ஒடிசா ரயில் விபத்து: சிபிஐ அதிகாரிகள் விசாரணை...!

ஒடிசா ரயில் விபத்தின் போது பணியில் இருந்த ரயில்வே ஊழியர்களின் செல்போன்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகேயுள்ள பாகாநாகா பகுதியில் கடந்த 2 ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணம் மின்னணு தடம் மாற்றும் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தான் என கண்டறியப்பட்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இவ்வாறிருக்க, தற்போது, இந்த விபத்து குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பாகாநாகா ரயில் நிலையத்திற்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த போது பணியில் இருந்த ரயில் ஊழியர்கள் சிலரின் செல்போன்களை கைப்பற்றி தகவல்கள் சேகரித்து வருகின்றனர். . ரயில்வே ஊழியர்கள் மீதான சிபிஐ விசாரணை மேலும் விரிவடையும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை...முதலமைச்சர் பெருமிதம்!