டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி...

டெல்லியில் ஒருவருக்கு
டெல்லியில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி...
Published on
Updated on
1 min read

பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கபடுகிறார்கள். இவர்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் வெளிநாட்டில் இருந்து  கர்நாடக மாநிலம் பெங்களூரைச் வந்த   இருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகஅம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுடைய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என மகாராஷ்டிரா சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதற்கிடையே நேற்று மும்பையில் ஒருவருக்கும், இன்று டெல்லியில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் மொத்த பாதிப்பு 5 ஆக உயர்ந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com