இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி...

குஜராத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி...

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் தென்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான், வேகமாகப் பரவி வருவதால், உலக நாடுகள் மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளன.

சில தினங்களுக்கு முன்னர், கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைத்தொடர்ந்து, அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜிம்பாவேவில் இருந்து குஜராத் திரும்பிய நபர் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் இதுவரை 3 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.