17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் அதிரடி கைது...!

தெலங்கானாவில் 17வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் அதிரடி கைது...!
Published on
Updated on
1 min read

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்திய ஹைதராபாத் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை குற்றவாளிகள் என அடையாளம் கண்டுள்ளனர். இதில் 3 பேர் சிறுவர்கள் எனவும் அதில் உள்துறை அமைச்சரின் பேரனுக்கு தொடர்பில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில் 5 குற்றவாளிகளும் சிறுமியை காரில் ஏற்றுச் செல்வது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள தெலங்கானா அமைச்சர் ராமாராவ், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடையவர்கள் எத்தகைய செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com