ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் எதிர்கட்சியினருக்கு காய்ச்சல் வந்துவிட்டது: பிரதமர் மோடி

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் எதிர்கட்சியினருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பிரதாமர் மோடி விமர்சித்துள்ளார்.  

ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் எதிர்கட்சியினருக்கு காய்ச்சல்  வந்துவிட்டது: பிரதமர் மோடி

நேற்று பிரதமர் மோடியில் பிறந்த நாளையொட்டி, மத்திய சுகாதாரத்துறை சார்பில் நாடு முழுவதும் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு சுகாதார ஊழியர்களுடன் காணொலி உரையாடலின் போது பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.கோவா மாநில சுகாதார ஊழியர்களுடன் கொரோனா மற்றும் தடுப்பூசி நிலை குறித்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.  

அப்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பயனாளிகளுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன் என்றும், ஆனால் நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதன் விளைவாக எதிர்கட்சியினருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை தற்போது தான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன் எனவும் தெரிவித்தார்.  

மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கும் எதிர்கட்சிகளின் காய்ச்சலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என சுகாதார ஊழியர் ஒருவரிடம் பிரதமர் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளிக்க முடியாமல் அந்த சுகாதார ஊழியர் திகைத்தார். தொடர்ந்து பேசிய மோடி, நேற்றைய சாதனைக்கு உறுதுணையாக நின்ற மருத்துவர்கள் மற்றும் சுகாதார  ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களையும் பாராட்டுவதாகவும் கூறினார்.