யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; மைதானத்தில் அத்துமீறிய இளைஞர்கள்..!

யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; மைதானத்தில் அத்துமீறிய இளைஞர்கள்..!

மாலத்தீவுகளில் இந்திய அரசு சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து இடையூறு செய்தனர். சர்வதேச யோகா தினத்தையொட்டி, அங்குள்ள கால்பந்து மைதானத்தில் இந்திய கலாச்சார மையம் சார்பில் யோகாசன பயிற்சி நடைபெற்றது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் சிலர், கையில் யோகா நிகழ்ச்சிக்கு எதிரான பதாகைகளுடன் மைதானத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களை விரட்டி, நாற்காலிகளை வீசினர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது.