
ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.
ஜி-20 அமைப்புக்கு தலைமை தாங்கிய இந்தியா கடந்த மாதம் அதன் உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்தியது.
இதனைத்தொடர்ந்து, ஜி-20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இந்த மாநாடு டெல்லியில் உள்ள யசோபூமியில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் ஜி-20 உறுப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மட்டுமின்றி, சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொள்கின்றனா்.
இதையும் படிக்க | ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பேமண்ட் முறை இன்று முதல்!!