ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் 7 பெரு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி!!..

ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் 7 பெரு நிறுவனங்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் 7 பெரு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி!!..

நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பை மேம்படுத்தும் நோக்கில்,  ஆயுத தொழிற்சாலை வாரியத்தை 7 பெரு நிறுவனங்களாக மாற்ற கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கென மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், அதிகாரம் பெற்ற அமைச்சர் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு வாரியத்தின் மொத்த பணியையும் கண்காணித்து, ஊழியர்கள் பணிமாற்றத்தால் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் பாதிக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கியது.

ஏனெனில் ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் கீழ்  41 ஆலைகளில் சுமார்  70,000 பேர் பணியாற்றி வந்தனர்.  தற்போது அந்த வாரியமானது கலைக்கப்பட்டு, முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட  7 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விஜயதசமியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி,  7 நிறுவனங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய மோடி, இந்த 7 நிறுவனங்களும் ‘ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு பணிகளுக்கு’  அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பளித்து எதிர்கால தொழில்நுட்ப பயன்பாட்டில் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் கூறினார். அதுமட்டுமல்லாது இந்த நிறுவனங்களுடன் சிறிய நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.