கர்நாடக மெட்ரோவில் பிரதமர் மோடி...!!

கர்நாடக மெட்ரோவில் பிரதமர் மோடி...!!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ள பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார் பிரதமர் மோடி.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வரவுள்ளது.  இந்த நிலையில், தேர்தலையொட்டி பிரதமர் மோடி மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அவ்வப்போது கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார். அதன்படி தனி விமானம் மூலம் பெங்களூரு வந்த பிரதமர் மோடி, சிக்கபல்லபூரில் உள்ள மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா சமாதியில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியைத்  மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இதைத் தொடர்ந்து பெங்களூருவில், கே.ஆர்.புரம் - whitefeild இடையே சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து அதில் பயணிகளுடன் மெட்ரோ பனியாளர்களுடன் பயணம் செய்துள்ளார்.  அடுத்தபடியாக பிரதமர் மோடி தாவணகெரேவுக்கு சென்று பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com