உத்தரப்பிரதேசத்திற்கு இன்று வருகை தருகிறார் பிரதமர் மோடி...!

உத்தரப்பிரதேசத்திற்கு  இன்று வருகை தருகிறார் பிரதமர் மோடி...!

உத்தரப்பிரதேசத்தில் 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்கண்ட் அதிவிரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.  இதனால் உத்திரபிரதேசத்துக்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பந்தல்கண்ட் அதிவிரைவு சாலையை திறந்து வைக்க உத்திர பிரதேசத்துக்கு வருகை தரும் பிரதமர்: 

உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட் நகரில் இருந்து தலைநகர் டெல்லியை இணைக்கும் வகையில், 14 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பந்தல்கண்ட் அதிவிரைவு சாலைக்கு, கடந்த 2020ம் ஆண்டு  பிரதமர் அடிக்கல் நாட்டினார். சுமார் 296 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த சாலை, சித்ரகூட், பந்தா, ஹமீர்பூர் மற்றும் ஜலான் உள்பட 7 மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மூலம், ஆக்ரா - லக்னோ அதிவிரைவுச் சாலை, யமுனா அதிவிரைவுச் சாலை வழியாக டெல்லியை அடைய முடியும். 7 முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த பந்தல்கண்ட் அதிவரைவு சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக உத்தரப்பிரதேசம் வருகைதரவுள்ள பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை திறப்பு குறித்து பிரதமர் மோடி ட்வீட்:

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பந்தல்கண்ட் அதிவிரைவு சாலை மூலம் உள்ளூர் பொருளாதாரம் பெரிதும் பயனடையும் என தெரிவித்துள்ளார். மேலும், தொழில் வளர்ச்சி பெருகும் என்றும் இந்த சாலை உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.