கர்நாடகா பாஜகவுக்கு எதிராக வலுவடையும் 'PayCM' பிரச்சாரம்!!!

கர்நாடகாவின் முதலமைச்சருக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய காங்கிரஸால் சமீபத்தில் தொடங்கப்பட்ட “ 40 சதவீத கமிஷன் அரசு” என்ற பிரச்சாரம் மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் PayCM சுவரொட்டிகள் மூலம் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு எதிரான அனைத்து ஊழல் குற்றசாட்டுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஒப்பந்தகாரர்கள்:
ஒரு சுவரொட்டியில் ‘ஜூனியர் இன்ஜினியர்’ பதவிக்கு ரூ. 30 லட்சம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஒப்பந்தக்காரர்கள் 40 சதவீதம்’ என்ற வாக்கியம் இடம்பெற்றுள்ளது.
முதலமைச்சர் பதவி:
முதலமைச்சர் பதவிக்காக ரூ. 2500 கோடி பண பரிவர்த்தனையில் ‘பணம் செலுத்த முடியவில்லை’ என எழுதப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிராக...:
ஆளும் பாஜகவுக்கு எதிராக ஊழல்களில் ஈடுபட்டதாக முதலமைச்சரையும் அமைச்சர்களையும் குறிவைத்து தாக்கி வருகிறது கர்நாடகா காங்கிரஸ்.
பசவராஜ் பொம்மை விளக்கம்:
“மாநிலத்தின் நற்பெயருக்கு மட்டுமின்றி எனது நற்பெயரையும் கெடுக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்படும் பிரச்சாரம் இது. உடனடியாக வழக்கு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பிரதமர் கனவில் முதுகில் குத்திய நிதீஷ்..!!!இது தொடரும்!!! ஜாக்கிரதை லாலு ஜி!!