இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா தொற்று... இயல்பு நிலை திரும்புமா..?

இந்தியாவில் கடந்த 88 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 53 ஆயிரமாக சரிந்துள்ளது. 

இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா தொற்று... இயல்பு நிலை திரும்புமா..?
இந்தியாவில் கடந்த 88 நாட்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 53 ஆயிரமாக சரிந்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 221 ஆக உயர்ந்துள்ளது. 
 
ஒரே நாளில், 78 ஆயிரத்து 190 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்தம் 2 கோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 199 பேர் குணமடைந்து உள்ளனர்.   
 
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 422 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கையானது 3 லட்சத்து 88 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. 
 
அதேசமயம், இந்தியா முழுவதும் 7 லட்சத்து 2 ஆயிரத்து 887 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
நாட்டில் இதுவரை 28 கோடியே 36 ஆயிரத்து 898 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.