விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை 33% அதிகம்…  

இந்தியாவில், விமான எரிபொருளை விட, பெட்ரோல் விலை 33 சதவீதம் அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

விமான எரிபொருளை விட பெட்ரோல் விலை 33% அதிகம்…   

கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உச்சம் கண்டு வருகிறது. தொடர்ந்து 4வது நாளாக இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 35 காசுகள் உயர்ந்துள்ளன. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 105 ரூபாய் 95 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

ஆனால் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் டர்பைன் எரிபொருள் லிட்டர் 79 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கார், இருசக்கர வாகனங்களுக்கான எரிபொருள் விலையை காட்டிலும், விமானத்திற்கான எரிபொருள் விலை 33 சதவீதம் குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ச்சியாக விலை ஏற்றத்தை அறிவித்து வருவது வாகன ஓட்டிகளை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. இந்தநிலையில் தேனியை சேர்ந்த  லாரி உரிமையாளர் சங்கம், டீசல்   விலை உயர்வால் ஏற்பட்ட மனவேதனை வெளிப்படுத்த, நூதன முறையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதனிடையே தொடர் விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோல் விலையில் 33 சதவீதம் வரி மத்திய அரசுக்கு செல்வதாக கூறினார். எரிபொருள் மீது அரசு விதித்து வரும் வரி மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு சமானம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.