
டெல்லியில் முதன்முறையாக, தசராவை முன்னிட்டு ராவணனின் உருவபொம்மை, டிஜிட்டல் முறையில் எரியூட்டப்படவுள்ளது.
ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரா திருவிழா நடப்பாண்டு, கொரோனா மற்றும் காற்று மாசு காரணமாக எளிமையான முறையில் பக்தர்களின்றி கொண்டாப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் முக்கிய நாளான இன்று இரவு ராணவனின் உருவபொம்மை எரியூட்டப்படவுள்ளது.
இதனை பக்தர்கள் நேரலையில் பார்க்கவும், மாசு ஏற்படுத்தாமல் இருக்கவும் ராம்லீலா நிர்வாகம் புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, வரலாற்றில் முதன்முறையாக, ராவணனின் உருவபொம்மை டிஜிட்டல் முறையில் எரியூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.