ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பயணியை காப்பாற்றிய காவலர்... வைரலாகும் வீடியோ...

ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பயணியை காப்பாற்றிய காவலர்

ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பயணியை காப்பாற்றிய காவலர்... வைரலாகும் வீடியோ...
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து கால் இடறி கீழே விழுந்த பயணியை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பையின் போரிவாலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி எதிர்பாராத விதமாக கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொள்கிறார்.
இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு ஓடிச்சென்று அவரை காப்பாற்றுகிறார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதன் திகைப்பூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.