மகளை டியூஷனுக்கு விட சென்ற காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை - துணைநிலை ஆளுநர் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் மகளை டியூஷனுக்கு அழைத்து சென்ற காவலர், தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மகளை டியூஷனுக்கு விட சென்ற காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை - துணைநிலை ஆளுநர் கண்டனம்!
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகரை சேர்ந்த சையிஃபுல்லா கத்ரி என்பவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் தனது மகளை டியூஷனுக்கு அழைத்து செல்வதற்காக சவுரா பகுதி வழியாக வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அவரை வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காவலர் கத்ரி  மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற அவரது 9 வயது மகள் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த கத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com