நீண்ட இழுபறிக்கு பின் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு?

புதுச்சேரி சட்டப்பேரவையில் நீண்ட இழுபறிக்கு பின் இன்று அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பின் அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு?

புதுச்சேரி சட்டப்பேரவையில் நீண்ட இழுபறிக்கு பின் இன்று அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார். அமைச்சர்கள் பங்கீடு தொடர்பாக இருகட்சிகளுக்கு இடையே நீண்ட இழுபறிக்கு பிறகு அமைச்சரவை கடந்த ஜூன் 27-ம் தேதி பதவியேற்றது.

இந்நிலையில், அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டாலும் அவர்களுக்கான துறைகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாமல் இருந்தது. துணை முதல்வருக்கு பதிலாக நமச்சிவாயத்துக்கு உள்துறையை வழங்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும், லட்சுமி நாராயணனுக்கு சுகாதாரம், தேனீ.ஜெயக்குமாருக்கு உள்ளாட்சித்துறை, சந்திர பிரியங்காவுக்கு கல்வித்துறை, சாய்.சரவணன்குமாருக்கு சமூக நலத்துறை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக விரும்பும் இலாகா பட்டியல் ஏற்கனவே முதல்வர் ரங்கசாமியிடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அமைச்சர்களுக்கான இலாகா பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அரசின் செயல்பாடுகள் வேகமெடுக்கும் என்றும், துறை ரீதியான நலத்திட்டங்களை செயல்படுத்த புதிய அமைச்சர்கள் தீவிர நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.