கோவா மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பிரமோத் சாவந்த்

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கோவா மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பிரமோத் சாவந்த்

கோவாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, 20 தொகுதிகளை கைப்பற்றியது. மெஜாரிட்டிக்கு இன்னும் ஒரு தொகுதியே தேவைப்படும் நிலையில், அக்கட்சி  சுயேட்சையாக வெற்றிப்பெற்றவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையை நேரில் சந்தித்த முதல்வர் பிரமோத் சாவந்த்  ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். இந்தநிலையில் முந்தைய 5 ஆண்டு பதவி காலம் நிறைவுற்றதையொட்டி, பிரமோத் சாவந்த்  பானாஜியில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பதவி ஏற்பு  குறித்து இன்னும் இறுதியாகவில்லை என பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.