
அசாம் | திப்ருகரில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி, கர்ப்பிணி ஆசிரியை ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து 22 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த செவ்வாயன்று நடந்த நிகழ்வால், எந்த வித உடல் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், மனதளவில் பெரும் காயமடைந்துள்ளார் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த ஆசிரியை.
திப்ருகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வேதாங்க் மிஸ்ரா தெரிவித்த தகவல்கள் படி, சுமார் 40 குழந்தைகள், அவர்களது குறைவான மதிப்பெண்களைப்ப் அற்றி புகாரளிக்க, அவர்களது பெற்றோரை அழைத்ததால், அந்த ஆசிரியையை சத்தமிட்டு துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனியாக சிக்கிக் கொண்ட ஆசிரியைச் சுற்றி வளைக்கப்பட்ட போது, அவரை சக ஊழியர்கள் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.
ரெசிடன்ஷியல் பள்ளியான சம்பவம் நடந்த பள்ளி, இந்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் 22 மாணவர்களை இடைநீக்கம் செய்தது. அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். உள்ளூர் நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், மற்ற மாணவர்களை அணிதிரட்டிய இரண்டு மாணவர்களை பள்ளி அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒரு மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவர்கள் மீது முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.