குடியரசுத் தலைவர் தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த பாஜக தீவிரம்! எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை!!

குடியரசு தலைவா் தோ்தலில் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, எதிர்க்கட்சி தலைவா்களுடன்  மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த பாஜக தீவிரம்! எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை!!

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் , மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அகியோருடன் தொலைபேசி மூலம் விவாதித்துள்ளார்.

இதில்  குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை ராஜ்நாத்சிங் கேட்டறிந்ததாகவும், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியாகவே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும்  தகவல் தொிவிக்கப்பட்டுள்ளது.