
டெல்லியில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடியின் உடை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் 73வது குடியரசு தினம் டெல்லி ராஜபாதையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி அணிந்திருந்த தொப்பி, உத்தராகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியாகும். அந்த தொப்பி "பிரம்மகமால்" மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் செல்லும் போதெல்லாம் பிரம்மகமால் மலர்களால் பிரதமர் கடவுளை பூஜிப்பார். தங்கள் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை அணிந்ததற்காக மக்கள் சார்பாக உத்தர்காண்ட் முதல்வர் புஷ்கர் சிங் டாமி நன்றி கூறியுள்ளார்.
இதேபோல் கழுத்தில் அணிந்திருந்த சால்வை மணிப்பூர் மாநிலத்தின் மெட்டே பழங்குடியின மக்களின் பாரம்பரிய "லீரம் பீ" ஆகும். அடுத்த மாதம் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இருமாநிலத்தையும் தனது உடையில் பிரிதிபலித்தவாறு மோடி அணிந்திருந்த உடை கவனத்தை ஈர்த்துள்ளது.