மரபணு சாரா பாசுமதி நெல் வகைகள் உள்பட 35  பயிர் வகைகளை  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு...

மரபணு சாரா பாசுமதி நெல் வகைகள் உள்பட 35  பயிர் வகைகளை  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

மரபணு சாரா பாசுமதி நெல் வகைகள் உள்பட 35  பயிர் வகைகளை  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பு...

சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரில் உயிரியல் சார்ந்த கல்வி நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வளாகத்தை பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது தேசிய வேளாண் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதுகளையும்  வழங்கினார். அப்போது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் 35 புதிய பயிர் வகைகளை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் மரபணு மாற்றம் செய்யப்படாத இரு வகை நெல்மணிகளும் இடம்பெற்றுள்ளன. 

விவசாயிகள் பொதுவாக பூசா பாஸ்மதி 1979 மற்றும் பூசா பாஸ்மதி 1985 ஆகிய வகை நெற்பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இந்த நெல் விதைகளை விவசாயிகள் சிறிய குட்டைகளில் பயிரிட்டு, பின்னர் அதை விளை நிலங்களில் நடுகின்றனர். இதனால் விவாசியகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவது மட்டுமல்லாமல், அதிகப்படியான நீரும் விரயம் செய்ய நேரிடுகிறது. இதுதவிர நெல்மணிகளில் அசிடோலாக்கேட் சிந்தேஸ் என்ற மரபணுவும் மாற்றப்பட்டிருப்பதால், களைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும்போது, நெற்கதிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.  

விவசாயிகளின் இத்தகைய சிரமத்தை போக்க தற்போது, இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் புதிய வகை நெல்மணிகளை உருவாக்கியுள்ளது. இந்த நெல்மணிகளை, கோதுமை போல் நேரடியாக நிலத்தில் விதைத்தால் மட்டும் போதுமானது என அந்நிறுவனத்தின் இயக்குனர் ஏ.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நெல்மணிகளின் டிஎன்ஏக்களில் இயற்கையாகவே, அசிடோலாக்கேட் சிந்தேஸ் என்ற மரபணு  இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் களைக்கொல்லி ரசாயனத்தை பயன்படுத்தும்போது,  பயிர்களுக்கு பாதிப்பு இருக்காது எனவும், களைகள் மட்டுமே கொல்லப்படும் என கூறியுள்ளார். எதிர்கால சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் புதிய வகை பயிர்களை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.