புதிய நாடாளுமன்ற கட்டிடம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

புதிய நாடாளுமன்ற கட்டிடம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். 

சுமார் 96 ஆண்டுகள் பழமையான தற்போதைய நாடாளுமன்ற வளாகத்திற்கு மாற்றாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. New Parliament Building Inauguration: When And Where To Watch Live Telecast

புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என ஒட்டுமொத்தமாக, 1,280 உறுப்பினர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இரு அவைகளிலும் கூடுதல் உறுப்பினர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.New Parliament building inauguration: Date and time, invitation list, when  and where to watch LIVE event, PM Modi's speech - FULL COVERAGE DETAILS |  News News, Times Now

மேலும் இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு மற்றும் புதிய நாடாளுமன்ற திறப்பை ஒட்டி 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட உள்ளார். விழாவின் முக்கிய அங்கமாக சுதந்திரத்தின் போது ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருந்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பெற்றுக் கொண்ட செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்பட உள்ளது. New Parliament Building Inauguration: 'Sengol' Kept in Museum As 'Stick of  Nehruji', Smriti Irani Tears Into Cong

இந்த விழாவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் உட்பட 25 அரசியல் கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதே நேரத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்றத்தின் அங்கமாகவும், நாட்டின் முதல் குடிமகனுமாக இருக்கக்கூடிய குடியரசுத் தலைவரை விழாவுக்கு அழைக்காததன் மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறி எதிர்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க:நடுநிலைமை வகிக்குமா செங்கோல்?