இந்தியர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பிரதமர் மோடி முயன்று வருகிறார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

மதங்கள், மொழிகளைக் கடந்து இந்தியர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பிரதமர் மோடி முயன்று வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியர்களிடம் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பிரதமர் மோடி முயன்று வருகிறார்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு...

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரு நாள் அரசு முறை பயணமாக கேரளா சென்றுள்ளார். இந்தநிலையில் இன்று  மலப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி , மத்திய அரசு இந்தியாவை ஒரு பிராந்திய கண்ணோட்டத்தில் பார்ப்பதாக குறிப்பிட்டார். ஆனால் இந்தியா என்பது ஒரு புவியியல் என்றும், அது மக்களால் ஆனது எனவும் ராகுல் கூறினார். 

ஆனால் பிரதமர் மோடி இந்தியர்களுக்கிடையிலான ஐக்கியத்தில் விரிசலை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். இதற்கென அவர் வெறுப்புணர்வு தூண்டும் பேச்சையே பயன்படுத்துவதாகவும் குறைகூறினார். மக்களிடையே மதம், மொழிகளை கடந்து ஐக்கியத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதே தமது பணி எனவும், அதையே தமது கடமையாக கருதுவதாகவும் ராகுல் கூறினார். 

இதற்கென பல்வேறு வகையான பாரம்பரியங்கள், மதங்கள், கலாச்சாரங்களை  அறிந்து கொள்ள தாம் முயற்சிப்பதாகவும்   ராகுல் கூறினார்.  அன்பு மூலம் மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தவே தாம் விரும்புவதாக கூறிய அவர், அதுவே மக்களின் பணியாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.