ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி.. ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு!!

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, கனடா பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி.. ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு!!

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 7 மாநாடு, இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

காலநிலை, எரிசக்தி, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. இதற்காக ஜெர்மனியில் முனிச் நகருக்கு சென்றடைந்த பிரதமருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜி 7 மாநாட்டில் பங்கேற்கும் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன் தொடர்ச்சியாக  புலம்பெயர்ந்த இந்திய சமூகத்தினரிடமும் பிரதமர் மோடி உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.