அக்டோபர் 30ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை?

அக்டோபர் 30ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை?
Published on
Updated on
1 min read

தேவர் குருபூஜையில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி அக்டோபர் 30ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முத்துராமலிங்க தேவரின் குருபூஜை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்  முத்துராமலிங்க தேவரின் குருபூஜை இந்த மாதம்  இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த குருபூஜையில் கலந்து கொள்ளும்படி தமிழ்நாடு பாஜக சார்பில்  பிரதமர் மோடிக்கு  அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு அழைப்பு:

இந்நிலையில் இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற அக்டோபர் 30ஆம் தேதியன்று ஒருநாள் பயணமாக தமிழகம்  வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பிரதமர் பசும்பொன் வருகை தந்தால் ராமேஸ்வரம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் டெல்லி விரைந்துள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. 

அக்டோபர் 30 ஆம் தேதி வருகை?:

இதனிடையே, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையில் பாஜகவின் முக்கிய மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், வருகிற 30ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், இன்னும் இந்த தகவல் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com