இந்தியாவில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றால் பொதுமக்கள் அதிர்ச்சி...

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானதை தொடர்ந்து, நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும்  ஒமிக்ரான் தொற்றால் பொதுமக்கள் அதிர்ச்சி...

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஒருவர் உட்பட இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனிடையே தான்சானியாவில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு என மொத்தம் 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் மேல் பகுப்பாய்வுக்காக சிலருடைய மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேலும் ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.