செல்பி எடுப்பது குற்றமா..? பெண் காவலர்களுக்கு பதில் என்னை தண்டியுங்கள்- பிரியங்கா காந்தி

தன்னுடன் செல்பி எடுத்து கொள்வது குற்றமாயின், பெண் காவலர்களுக்கு பதில் தன்னையே தண்டிக்கும்படி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

செல்பி எடுப்பது குற்றமா..? பெண் காவலர்களுக்கு பதில் என்னை தண்டியுங்கள்-  பிரியங்கா காந்தி

உத்திரபிரதேசத்தில் அண்மையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர், காவல் நிலையத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி ஆக்ரா சென்றபோது, அவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது சில பெண் காவலர்கள் பிரியங்காவுடன் செல்பி எடுத்து கொண்டதாக தெரிகிறது. இந்தநிலையில், பிரியங்காவுடன் செல்பி எடுத்துக்கொண்ட பெண் காவலர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த லக்னோ ஆணையர் துருவா கந்த் தாகூர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை கடுமையாக விமர்சித்து டுவிட் செய்துள்ள பிரியங்கா, செல்பி எடுத்ததற்காக பெண்  காவல்துறையினரின் வாழ்க்கையை கெடுப்பது அரசுக்கு நல்லதல்ல என கூறியுள்ளார். தன்னுடன் செல்பி எடுப்பது குற்றமாயின் தன்னையும் தண்டிக்கும்படி  குறிப்பிட்டுள்ளார்.