இலவச தரிசனத்துக்கு 48 மணி நேரம் காத்திருப்பு...மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருப்பதி!

இலவச தரிசனத்துக்கு 48 மணி நேரம் காத்திருப்பு...மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருப்பதி!

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டிமக்கள் கூட்டம் அலை மோதுவதால் திருப்பதி மலை திக்கமுக்காடி வருகிறது. கண்ணுக்கு தென்படும் திசை எங்கும் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு  ஏழுமலையானை நோக்கி பக்தர்கள் படையெடுக்கின்றனர்.

மக்கள் வெள்ளத்தில் திருப்பதி:

திருப்பதியில் வழக்கமாக விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஆனால், புரட்டாசி 3வது சனிக்கிழமையான இன்று திருப்பதியும், திருமலையும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

இதையும் படிக்க: "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் வெளியீடு!

நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்:

இலவச தரிசனத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டு பக்தர்கள் பரவசத்துடன் எழுமலையானை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால்  திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு சாலைகளில் குழந்தைகளுடன் காத்து உள்ளனர்.

48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை:

இதில் ஒரு லட்சம் பக்தர்கள் தற்போது வரிசையில் நிற்பதால் இலவச தரிசனத்திற்காக 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது. 300 ரூபாய் தரிசனத்திற்கு 7 முதல் 8 மணி நேரம் ஆகும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகையால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.