விபத்தில் காயமடைந்த புதின்...புதினின் தற்போதைய நிலை என்ன?!!

விபத்தில் காயமடைந்த புதின்...புதினின் தற்போதைய நிலை என்ன?!!

ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.  அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் ஒரு கியூபா தலைவருடனான சந்திப்பின் போது, ​​நாற்காலியைப் பிடித்தபடி புதின் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார்.

ரஷ்ய  அதிபர் விளாடிமிர் புதினுக்கு உடல்நலக்குறைவு குறித்த செய்திகள் பலமுறை ஊடகங்களில் வந்துகொண்டே இருக்கின்றன.  இதற்கிடையில், ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் படிக்கட்டுகளில் இருந்து தவறி கீழே விழுந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவர் படிக்கட்டுகளில் ஏறியபோது, ​​அவர் தவறி விழுந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இந்த விபத்தில் அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குப் பிறகு அவரை அவரது தனிப்படை காவலர்கள் தூக்கிச் சென்றதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.  மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவருக்கு பலத்த காயம் எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.  இரவில் அவரது உடல்நிலை சீராக இருந்தது மட்டுமல்லாமல், அவரால் தனியாக நடக்க முடிந்தததாகவும் கூறியுள்ளனர் மருத்துவர்கள்.  இருப்பினும், முதுகெலும்பின் கீழ் கோசிக்ஸ் பகுதியில் வலி காரணமாக, அவர் உட்காருவதில் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    "பெண்களுக்கு வாக்களிப்பது....” சர்ச்சை கருத்து கூறிய அகமது சித்திக்!!!