நேற்று 2 கோடி பேர் தடுப்பூசி செலுத்தினர்: அந்த வேகம் தினமும் இருக்க ராகுல்காந்தி கோரிக்கை...

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நேற்றைய வேகமே நாட்டுக்கு தேவை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் 2.50 கோடி பேருக்கு தடுப்பூசி செத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு பலவேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படுகிறதா அல்லது பிரதமரின் பிறந்தநாளுக்காக செலுத்தப்படுகிறதா என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இனிவரும் நாட்களிலும் நேற்றைய தினம் போல 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தினால் நல்லது எனவும் இப்போது உள்ள சூழலுக்கு இந்த வேகமே நாட்டுக்கு தேவை எனவும் பதிவிட்டுள்ளார். நேற்றைய வேகம் போல் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை தொடர்ந்தால் விரைவில் ஒட்டு மொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடித்து விடலாம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.