தமிழகத்தில் முடிந்த நடைப்பயணம்...கேரளாவில் தொடக்கம்...!

தமிழகத்தில் முடிந்த நடைப்பயணம்...கேரளாவில் தொடக்கம்...!

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவில், இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். 

இந்திய ஒற்றுமை பயணம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது.

வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு:

கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு தொடங்கிய இந்த நடைப்பயணம் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில், தக்கலை வழியாக நான்கு நாட்கள் தமிழகத்தில் பயணத்தை தொடர்ந்த ராகுல்காந்திக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க: தெலுங்கு திரையுலகின் ”ரெபல் ஸ்டார் ” காலமானார்.. அரசியலிலும், சினிமாவிலும் தடம் பதித்தவர்..!

தமிழகத்தில் பயணம் முடிவு:

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக பயணம் செய்த ராகுல் காந்தி, நேற்றிரவுடன் தனது தமிழ்நாடு பயணத்தை முடித்துவிட்டார்.

கேரளாவில் பயணம் தொடக்கம்:

இதனையடுத்து, நேற்றிரவு கேரள மாநிலத்திற்குள் அடியெடுத்து வைத்த அவர், பாறசாலையில் உள்ள செறுவாரக்கோணத்தில் ஓய்வெடுத்தார். இந்த நிலையில், 5ம் நாளான இன்றைய பயணத்தில், செறுவாரக்கோணத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ராகுல்காந்தி தனது நடைப்பயணம் தொடங்கினார்.