ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் - டெல்லியில் அமைதி பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது..!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் - டெல்லியில் அமைதி பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது..!

நாடாளுமன்ற உறுப்பினா் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், டெல்லியில் அமைதி பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தலைவர்களை காவல்துறையினா் கைது செய்தனர்.

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, அவரது நாடாளுமன்ற பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக, அரவது அலுவலகத்தை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

அடுத்தடுத்து நடந்து வரும் இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சியும் எதிர்வினையாற்றி வருகிறது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற வளாக பகுதியில் கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வது என தொடர்ச்சியாக அக்கட்சியினர் பல பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி செங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரவு 7 மணியளவில் ஒன்று திரண்டு போராட்த்தில் ஈடுப்பட்டனா். பின்னா் அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தி 
கைது செய்தனர்.