அசாம், மிசோரம் மோதல்... மத்திய அரசை குற்றம் சாட்டிய ராகுல்...

மக்களிடையே வெறுப்பை விதைப்பதன் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் நாட்டை மீண்டும் ஒரு முறை தோல்வியடைய செய்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் சாடியுள்ளார். 

அசாம், மிசோரம் மோதல்... மத்திய அரசை குற்றம் சாட்டிய ராகுல்...
அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில், எல்லையில் பிரச்சனைக்குரிய பகுதியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மோதலின்போது அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு,  துப்பாக்கி சூடும் நடத்துள்ளது. இதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  
 
இதில் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், மக்களிடையே வெறுப்பையும் அவநம்பிக்கையையும் விதைப்பதன் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் நாட்டை மீண்டும் ஒரு முறை தோல்வியடைய செய்துள்ளதாகவும், இந்தியா இப்போது அதன் பயங்கரமான விளைவுகளை அறுவடை செய்து வருவதாகவும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.