ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை - ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை - ரயில்வே அமைச்சகம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இரவில் அதிகரிக்கும் இடையூறு:

இரவில் வெகுதூரங்களுக்கு பயணம் செய்ய முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் ரெயில் பயணங்களையே விரும்புகின்றனர். ஆனால் அண்மை காலமாக  இரவில் ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு இடையூறு அதிகமாக இருப்பதால் விதி முறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள்:

புதிய விதிகளை அனைத்து பயணிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முழுமையான தகவல்களை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இரவு பயணத்தின் போது எந்த ரெயில் பயணிகளும் செல்போனில் சத்தமாகப் பேசவோ, உரத்த குரலில் பாடல்களைக் கேட்கவோ கூடாது என கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்:

இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் எனவும், மீறி செயல்பட்டால் பயணிகளிடமிருந்து பெறப்படும் புகார்களின் பேரில் ரெயில்வே நிர்வாகம் அத்தகைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, வரும் காலங்களில் பயணிகள் பாதிக்கப்பட்டால் ரெயில்வே ஊழியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com