பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள்... இறந்தும் விடாமல் பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல்!  

 பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள்... இறந்தும் விடாமல் பாலியல் துன்புறுத்தல் செய்த கும்பல்!  

மாடு மேய்க்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மாடு மேய்க்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பண்டி பகுதியை சேர்ந்த 16 வயது மலைவாழ் சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் மாடு மேய்க்க சென்றுள்ளார்.அப்போது அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள், அந்த சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.அப்போது அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் பற்றி போலீஸிக்கு தகவல் அனுப்பபட்டது. 

இது தொடர்பாக பண்டி மாவட்ட எஸ்.ஐ. ஜெய் யாதவ் கூறும்போது, 3 மர்ம நபர்கள் சேர்ந்து இந்த சிறுமியை கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட முறை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது இந்த பெண் இறந்துவிட்டதாகவும்,இறந்த பிறகும் விடாது பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com