சொற்பொழிவு ஆற்றுவதை நிறுத்துங்க.. டுவிட்டர் மீது ரவிஷங்கர் காட்டம்!!

சொற்பொழிவு ஆற்றுவதை நிறுத்துங்க.. டுவிட்டர் மீது ரவிஷங்கர் காட்டம்!!

ஜனநாயகம் குறித்து சொற்பொழிவு ஆற்றுவதை விடுத்து, இந்திய சட்ட திட்டங்களை மதிக்க ட்விட்டர் நிறுவனம் கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க, ட்விட்டரை தவிற பிற அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தனியுரிமையை மத்திய அரசு மதிப்பதாகவும், ஆனால் அதேநேரம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சமூக விரோத போக்கை அடையாளம் காணுவது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் கூறினார்.

இந்தியா என்பது அரசியலமைப்பு, சட்டங்கள், ஊடகங்கள் மற்றும் நீதித்துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு ஜனநாயக நாடு என குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தின் நன்மைகள் மற்றும் தகுதிகள் குறித்து சொற்பொழிவு ஆற்றுவதை விடுத்து மத்திய அரசின் சட்டங்களுக்கு கீழ்படிய டுவிட்டர் நிறுவனம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.