”இந்தியாவின் உண்மையான அளவு மிகப் பெரியது.....” சட்ட அமைச்சர்!!

”இந்தியாவின் உண்மையான அளவு மிகப் பெரியது.....” சட்ட அமைச்சர்!!

Published on

இந்தியாவின் உண்மையான அளவு மிகப் பெரியது என்பது யாருக்கும் தெரியாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

இந்தியாவைக் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் இந்தியாவின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு.  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது இந்தியாவின் அளவு மிகப்பெரியது எனத் தெரிவித்தார்.  அதாவது கந்தஹார், தக்ஷஷிலா, இந்தோனேசியா மற்றும் இமயமலைக்கு அப்பால் இந்தியா செல்வாக்கு பெற்றிருந்ததாக கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர் இந்தியா தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் நாம் தற்போதைய நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் பல காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார்.  அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இவ்வாறு பேசியது காங்கிரஸ்ஸை குறித்தே என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com