உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா: கொலிஜியம் எடுத்த திடீர் முடிவு...மத்திய அரசு ஏற்குமா?

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா: கொலிஜியம் எடுத்த திடீர் முடிவு...மத்திய அரசு ஏற்குமா?

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

முனீஷ்வர்நாத் பண்டாரி:

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்திருந்த  முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இவரையடுத்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்து தலைமை நீதிபதியான எம்.துரைசாமியும் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.

டி.ராஜா:

அடுத்ததாக, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த டி.ராஜாவை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா செயல்பட்டு வருகின்றார். 

இதையும் படிக்க: உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது...ஆளுநருக்கு பதிலடி கொடுத்த மதுரை எம்.பி! 

கொலிஜியம் கூட்டம்:

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றவுடன் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்படும். பின்னர் குடியரசு தலைவர் பணியிட மாறுதல் உத்தரவை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான உத்தரவு விரைவில் வரும் என கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்ற கொலிஜியம் கூட்டம் ஏன் திடீரென மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.