ஆரம்ப நிலை முதல் உயர் நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க பரிந்துரை

பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் 4 தரைப் பாலங்களும் நீரில் மூழ்கியுள்ள நிலையில், பொதுமக்கள் ஆபத்தை உணராமல், பாலத்தின் மீது சென்று வருகின்றனர். 

ஆரம்ப நிலை முதல் உயர் நிலை வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க பரிந்துரை

நாடு முழுவதும் ஆரம்ப பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து பகுதி பகுதியாக உயர்நிலை வகுப்புகள் வரை பள்ளிகளை திறக்க மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து ஐசிஎம் ஆர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 500 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் 32 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்றால் லேசான பாதிப்புகே ஏற்படும், என்றும், நோய் பாதிப்பு தீவிரமாக மாறுவதற்கோ, உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்று ஐ.சி.எம். ஆர். தெரிவித்துள்ளது.  

மாணவர்களுக்கு பள்ளியில் உடல்வெப்ப பரிசோதனை செய்வதை காட்டிலும் குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது மாணவர்களிடையே தொற்று பரவலை தடுக்கவும் அவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும் உதவும் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.