வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு; வணிகர்கள் மகிழ்ச்சி..!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு; வணிகர்கள் மகிழ்ச்சி..!

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனம் இன்று குறைத்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள ஒரு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  

இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாயில் இருந்து, 2 ஆயிரத்து 373 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியில் 2 ஆயிரத்து 219 ரூபாய் எனவும் கொல்கத்தா 2 ஆயிரத்து 322 ரூபாய் எனவும் மும்பையில் 2 ஆயிரத்து 171 ரூபாய் 50 காசுகள் எனவும் விலை நிணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.