பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளுக்கு 10% இடஒதுக்கீடு- இன்று தீர்ப்பு...

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்புகளுக்கு 10% இடஒதுக்கீடு- இன்று தீர்ப்பு...
Published on
Updated on
1 min read

கடந்த 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. 

இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுஅதன் மீதான விசாரணை ஐந்து  நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யுயு லலித் ஓய்வு பெறும் நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. 

மேலும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி பதவியேற்றாா். 8ஆம் தேதி குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடைசியாக இன்று பணியாற்ற உள்ளாா்.

இதையொட்டி, அவா் தலைமையில் கூடும் சிறப்பு அமா்வின் நடவடிக்கைகள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு கூடும் அந்த அமா்வில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பெலா எம்.திரிவேதி ஆகியோா் இடம்பெற உள்ளனா்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com