ராமநவமி ஊர்வலத்தின் போது கலவரம் - 36 பேர் கைது!

மேற்குவங்கத்தில் ராமநவமி ஊர்வலத்தின்போது கலவரம் நடைபெற்ற அதே இடத்தில், இன்றும் கல்வீச்சு சம்பவம் அரங்கேறியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ராமநவமியையொட்டி, மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணி நடத்த பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் ஹவுராவின் ஷிப்பூர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மசூதியின் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, இஸ்லாமியர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க : வேல்முருகனின் கேள்விக்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர்.கே....!
தொடர்ந்து போலீஸ் வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியும் கடைகளை சூறையாடியும் கலவரம் அரங்கேறியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி, 36 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து அதையும் மீறி அப்பகுதியில் இன்று இரு தரப்பினர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால், போலீசார் தடியடி நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும், ஊர்வலத்தின்போது குறிவைக்கப்பட்டதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.