அதிகரிக்கும் போலி கணக்குகள்... 24 மணி நேரத்தில் முடக்க மத்திய அரசு உத்தரவு

சமூகவலைதளங்களில் போலிக் கணக்குகள் குறித்த புகார்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அதிகரிக்கும் போலி கணக்குகள்... 24 மணி நேரத்தில் முடக்க மத்திய அரசு உத்தரவு
Published on
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் அதிகரித்து சைபர் குற்றங்களுக்கு அதிகரித்து உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.

 போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நூறு கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தொழில்நுட்ப விதிகளின்படி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் ஆகிய ஆகிய சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

திரைத்துறைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை பயன்படுத்தி போலிக் கணக்குகள் சமூக வலைதளங்களில் ஏறாளாமாக உள்ளது.

திரைத்துறை பிரபலங்களின், ரசிகர்கள் பல பேர் இந்த செயல்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போலி செய்திகளில் திரைப் பிரபலங்கள் உள்படப் பல துறையைச் சேர்ந்தோர் சிக்கிக் கொள்கின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலிக் கணக்குகள் குறித்த புகார்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com