நடு வழியில் செயலிழந்து நின்ற ரோலர்கோஸ்டர் - 235 அடி உயரத்தில் தொங்கியபடி தவித்த சுற்றுலா பயணிகள்!!

நடு வழியில் செயலிழந்து நின்ற ரோலர்கோஸ்டர் - 235 அடி உயரத்தில் தொங்கியபடி தவித்த சுற்றுலா பயணிகள்!!

நடு வழியில் ரோலர்கோஸ்டர் செயலிழந்ததால் 235 அடி உயர அந்தரத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்த சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்தின் Blackpool Pleasure Beach பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகின் மிக உயரமான மற்றும் செங்குத்தான இந்த ரோலர் கோஸ்டர் கடந்த 1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் கடற்கடற்கரையில் குவியும்  ஏராளமான மக்கள் இந்த ரோலர்கோஸ்டரில் உல்லாச சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள்  ரோலர்கோஸ்டரில் செல்ல, அது நடு வழியில் செயலிழந்துள்ளது.  235 அடி உயரத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கு பயணிகள் அந்தரத்தில் தொங்கியபடி தவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.