2021ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளில் இந்த நோட்டுகள் தான் அதிகமாம்?

2021ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளில் இந்த நோட்டுகள் தான் அதிகமாம்?
Published on
Updated on
1 min read

கடந்த 2021ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளில் 60 சதவீதம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

2016:

கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட பின், 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளை ஒழிக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

2021:

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் மொத்தம் 20 கோடியே 39 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. பிடிபட்ட நோட்டுகளில் 12 கோடி ரூபாய் நோட்டுகள், அதாவது 60 சதவீதம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் என தெரிய வந்துள்ளது.

பணமதிப்பிழப்பிற்கு முன் 15 கோடி ரூபாய் நோட்டுகள் மட்டுமே பிடிபட்ட நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் 97 கோடி ரூபாய் நோட்டுகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com