சாலையோர உணவகத்துக்கு ரூ.21 கோடி மின்கட்டணம்...

ஆந்திராவில் உணவகம் ஒன்றிற்கு 21 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்ததால் அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

சாலையோர உணவகத்துக்கு ரூ.21 கோடி மின்கட்டணம்...

ஆந்திராவில் உணவகம் ஒன்றிற்கு 21 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்ததால் அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சிந்தளபூடியைச் சேர்ந்த நாகமணி என்பவர் சிறிய அளவிலான உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது உணவகத்துக்கு மாதந்தோறும் மின்கட்டணமாக 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்த போது 47 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகமணி, மின்வாரியத்தில் புகாரளித்தார்.

இதையடுத்து மின்மீட்டர் பிரச்சனையாக இருக்கலாம் எனக் கூறிய அதிகாரிகள் பழைய மீட்டரை அகற்றிவிட்டு புதிய மீட்டரை வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த மாதம் மின்கட்டணம் 21 கோடியே 48 லட்ச ரூபாய் என வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகமணி,  அதிகாரிகளிடம் புகாரளித்தார். எனினும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கமால் அலட்சியம் காட்டுவதாகத் தெரிவிக்கும் நாகமணி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்